சிறுவயதில் அப்பாவுடன் சென்ற தியேட்டருக்கு திடீர் விசிட்… நெகிழவைத்த மிஷ்கின்!

இயக்குநர் மிஷ்கின் சிறுவயதில் தனது அப்பாவுடன் அடிக்கடிச் சென்று படம் பார்க்கும் திண்டுக்கல் என்.ஜி.வி.பி தியேட்டருக்கு திடீர் விசிட் அடித்து, அதன் உரிமையாளரை நெகிழ வைத்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கினின் முதல் படம் ’சித்திரம் பேசுதடி’ கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியானது. இந்த பதினான்கு வருடங்களில் அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட 14 வருடங்களில் குறிப்பிட்ட படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். குறைவான படங்களே இயக்கியிருந்தாலும் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லருக்காக மிஷ்கின் படங்களுகளை கொண்டாடவும் விமர்சிக்கவும் காத்துக்கொண்டிருகும் திரை விமர்சகர்களும் இருக்கிறார்கள்.

 image

இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் தனது படத்திற்காக திண்டுக்கல் மாநகர் பகுதியில் லொகேஷன் பார்க்க சென்ற இடத்தில்,  பல வருடங்களுக்கு முன்னர் தன் சிறு வயதில் தனது தந்தையுடன் சென்று திரைப்படங்கள் பார்த்த திரையரங்கை சென்று பார்வையிட்டுள்ளார். அங்கிருந்த வயதான தியேட்டர் முதலாளி இயக்குநர் மிஷ்கினை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

image

ஆன போதிலும் அவர்,  தியேட்டரை பார்வையிட வந்ததை கேட்டு மகிழ்ந்து, மரியாதை நிமித்தமாக தியேட்டரை சுற்றி காட்டியதுடன், சில காட்சிகளை தியேட்டரில் திரையிட்டு காட்டினார்.

image

சிறு வயதில் கண்ட அதே உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் அக்காட்சிகளை கண்டு மகிழ்ந்தார் மிஷ்கின். தியேட்டர் முதலாளியின் மகன்களால் அவர் அடையாளம் கண்டுக்கொள்ளப்பட்டு அவர் வந்ததில் பெருமையடைந்து  மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.  ஆனால் இந்த நேரத்தில்  அந்த தியேட்டர்  இன்னும் சில காலங்களில் இடிக்கப்படவுள்ள செய்தி கேட்டு மனம் வருந்தினார் மிஷ்கின்.

image

’பிரபலங்கள் களத்தில் இறங்கி திரையரங்குகளை பார்வையிட்டு திரையரங்குகளுக்கு ரசிகர்களை கூட்டி வர வேண்டும். இந்த கடினமான காலத்தில் திரைப்படங்களுக்கு செய்யும் மிகப்பெரும் மரியாதையாக, பிரபலங்கள் ஒன்று சேர்ந்து திரையரங்குகளை பாதுகாக்க வேண்டும்’ என்று கூறும் மிஸ்கின், அது ஒன்றே இப்போதைய அவசிய தேவை என்று அவர் நம்புகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM