இந்தியாவில் பொது மக்கள் இடையிலான வருமான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
world inequaility lab என்ற அமைப்பு சர்வதேச அளவிலான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிலும் சீனாவிலும் 1990ஆம் ஆண்டுகளில் இருந்து ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இந்த ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு தற்போது குறைந்துவிட்ட நிலையில் இந்தியாவில் ஏழை, பணக்காரர் வித்தியாசம் விரிவடைந்து கொண்டே செல்வதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கும் ஏழை, பணக்காரர் வருமான விகித்திற்கும் இடையே தொடர்பில்லை என்பதை தங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM