துபாயில் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்காக ரோகித்தும், டி காக்கும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
ஆரம்பம் முதல் டெல்லி பந்துவீச்சை அதிரடியாக அடித்து விளையாடினர் இருவரும். 21 பந்துகளில் 41 ரன்களை குவித்தனர். அதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.
டி காக் 20 ரன்களில் அவுட்டானார். ரோகித் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர்களது ஆட்டம் ‘மும்பைக்கு தான் கோப்பை’ என அடித்து சொல்வதை போல இருந்தது. மும்பை அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசியுள்ளார். ரபாடா ஓவரில் பவுண்டரிகளாக அடித்து தள்ளினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM