ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா காலம் என்பதால் வாக்குகளை எண்ணுவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 146 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 46 இடங்களிலும் பாஜக 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், ஐக்கிய ஜனதா தளம் 27 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக கூட்டணி 123 இடங்களிலும், ராஷ்டிர ஜனதா தளத்தின் மெகா கூட்டணி 113 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகள் அறிவிக்க நள்ளிரவுக்கு மேல் ஆகும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
இந்நிலையில், ஆர்.ஜே.டி கட்சியானது 119 இடங்களைப் பிடித்திருப்பதாகவும், ஆனால் அதற்கான வெற்றி சான்றிதழ்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கொடுக்காமல் இழுபறி செய்துவருவதாக அக்கட்சியின் குற்றசாட்டு வைத்துள்ளனர். இது தொடர்பாக பாட்னாவில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலமாக புகார் அளித்துள்ளார்கள். இடது சாரிகளை பொருத்தவரையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM