ஆட்டிசம் பாதித்த மகனை தனது வயிற்றுடன் கட்டிக்கொண்டு தந்தை ஒருவர் விளையாட்டு மைதானத்தில் மற்ற சிறுவர்களுடன் பந்து விளையாடி மகிழ வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

image

எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது, தனது விருப்பத்தைக் குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்திச் சுட்டிக்காட்டாமல் இருப்பது, சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது, பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது, வித்தியாசமான நடவடிக்கைகளை, ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வது,தனது தேவைகளை உணர்த்த, பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது, காரணமில்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, வலியை உணராமல் இருப்பது போன்றவையே ஆட்டிசம் பாதிப்பாகும். இதனால், பெரும்பாலான ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் கற்றல், விளையாட்டு திறன்கள் இன்றி வீடுகளிலேயே வைத்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

‘the feel good page’ என்ற ட்விட்டர் பக்கத்தில், அப்படி ஆட்டிசம் பாத்த தனது மகன் விளையாடி மகிழவேண்டும் என்று நினைத்த தந்தை ஒருவர் மகனை வயிற்றோடு கட்டிகொண்டு பந்து விளையாடுகிறார். விளையாட்டுத் திடலில் பந்து விளையாடும் சிறுவர்களுடன் ஆட்டிசம் பாதித்த சிறுவனின் தந்தையும் சிறுவனை விளையாட வைத்து மகிழ வைக்கிறார். பந்தைப் பார்த்ததும் சிறுவன் முகத்தில் தவழும் புன்னகையும், அவனுக்காக தந்தையும் வயிற்றில் கட்டிக்கொண்டு நகருவதும் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.