டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா? உயர்நீதிமன்றம் கேள்வி

தனிமனித இடைவெளி காரணமாக கிராமசபை கூட்டம் ரத்து என்றால் டாஸ்மாக்கில் அது பின்பற்றப்படுகிறதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

image

இது தொடர்பான வழக்கில் “கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் தனிமனித சமூக இடைவெளி விதிகள்தான் என்று அரசு தெரிவித்தது”. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் “தனிமனித இடைவெளி காரணமாக கிராமசபை கூட்டம் ரத்து என்றால் டாஸ்மாக்கில் அது பின்பற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM