தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார் நடிகை சமந்தா

நாடு முழுவதும் நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டுப் பண்டிகைகளும் பெண்களை முக்கியப்படுத்தியப் பண்டிகைகள் என்பதால் நடிகை சமந்தா நாளை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

image

இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆண் நடிகர்களால்தான் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகர்ஜுனாவுக்குப் பதில் சமந்தா தொகுத்து வழங்க விருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

image

பிக்பாஸ் என்பவர் ஒரு ஆணாகத்தான் இருக்கவேண்டுமா? பெண்களுக்கு அந்தத் திறமை இல்லையா? போன்ற கேள்விகள் எழுந்துவந்த நிலையில் சமாந்தா தொகுத்து வழங்குவது பாராட்டுக்களைக் குவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.