இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்தான் முதலிடத்தில் உள்ளது. கிராமம், நகரம் என்ற பாகுபாடில்லாமல் இந்தப் புற்றுநோய் பெண்களைத் தாக்குகிறது. மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நாள்களிலேயே கண்டறிந்தால் இதனை முழுவதுமாக குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Radiation Oncologist Dr.Ratna Devi

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அவள் விகடன் வழங்கும் `மார்பகப் புற்றுநோயை வெல்வோம்!’ என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அக்டோபர் 27-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும்.

மூத்த கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர் ரத்னா தேவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார். நிகழ்ச்சியின் இறுதியில் வாசகர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் மருத்துவர் விடையளிப்பார். மார்பகப் புற்றுநோய் தொடர்பான A to Z விவரங்களை இதில் தெரிந்துகொள்ளலாம்.

மார்பகப் புற்றுநோயை வெல்வோம்

இந்தக் கட்டணமில்லா இலவச வெபினாரில் கலந்துகொள்ள கீழ்க்காணும் இணைப்பை க்ளிக் செய்யவும்.

https://bit.ly/31DKpgm

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.