அரசியலுக்கு ஆயத்தமா? நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை

சென்னை அருகே பனையூரில் உள்ள இல்லத்தில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் உரிய நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என அவரது தந்தை சந்திரசேகர் கூறியிருந்த நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM