அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறந்த விக்கெட் கீப்பர்களில் முதலிடத்தில் உள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

image

இந்தத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே தோனி குறித்து பரவலாக பேசி வந்தனர் ரசிகர்கள். 2019 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்திற்கு பிறகு லைவ் ஆக்ஷனில் தோனியின் தரிசனத்தை பார்ப்பதற்கான வாய்ப்பாக ஐபிஎல் அமைந்ததே அதற்கு காரணம். image

இருப்பினும் தனது பேட்டிங் திறனால் இந்த சீசனில் ரசிகர்களை அதிகம் கவர் தவறிய தோனி விக்கெட் கீப்பிங் திறனால் மெர்சலாக்கியுள்ளார்.

பத்து ஆட்டங்களில் 15 டிஸ்மிஸல்களை தோனி தன் வசம் வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டிகாக், பண்ட், பேர்ஸ்டோ மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளனர்.  

image

அதோடு தோனி 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர், சென்னை அணிக்காக 4000 ரன்களை கடந்தும் இருந்தார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.