தியேட்டர்களை அக்டோபர் 15-ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தியேட்டர்கள் தந்த அனுபவங்கள் ரசனையானவை. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தியேட்டர்லவ் என்ற பெயரில் பிரபலங்களின் ஞாபகங்களை மீட்டுவருகிறது. இயக்குநர் கண்ணனின் அனுபவங்கள் எப்படி? பார்க்கலாம்.

image

“முதலில் இரண்டு படங்களை ரசித்துப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. உதயம் தியேட்டரில் ரசித்த  நாயகன், அக்னி நட்சத்திரம்… படங்கள்தான் என்னை சினிமாவுக்கு அழைத்துவந்தன. அக்னி நட்சத்திரத்தை தியேட்டரில் பார்த்தது வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ். படத்தில் கார்த்திக், பிரபு இருவரின் முதல் சந்திப்பும் என் மனதில் அப்படியே இருக்கிறது. பிசி ஸ்ரீராம் சார் பனிக்கான பில்டரைப் பயன்படுத்தியிருப்பார். அதனால் ஒவ்வொரு காட்சியும் பிரகாசமாகத் தெரியும். அந்தப் படம் சிறந்த காட்சி மற்றும் ஒலியின் படைப்பாக இருக்கும்.

image

நான் மணிரத்னம் சாருடன் பணியாற்றும்போது, அக்னி நட்சத்திரம் படத்தில் அசிகமான ஒலியை எப்படி கொண்டுவந்தீர்கள் என்று கேட்டேன். சென்னையில் இருந்த எல்லா ஒலிப்பதிவுக் கூடங்களும் எல்லை மீறாத ஒரே வகையான ஒலிப்பதிவு முறையையே கடைப்பிடித்தன. எனவே அவர் ஒலிப்பதிவு பொறியாளரிடம் சொல்லி புதுமை செய்ததாக என்னிடம் கூறினார். இரண்டு முக்கியமான கதாபாத்திரங்களும் சந்திக்கும்போது அதிக அளவிலான ஒலியைப் பயன்படுத்தியிருப்பார்.

image

ஆனால் ஒலிப்பதிவாளர் டென்ஷன் ஆகிவிட்டாராம். அதற்குப் பணம் கொடுப்பதாகவும், ஏதாவது ஒரு காட்சியிலாவது இடியைப் போன்ற ஒலி வரவேண்டும் என்று வலியுறுத்தினாராம். இருவரும் ஒருவழியாக முடிவுக்கு வந்தார்கள். அந்தப் புதுமையான சத்தத்தை பெரிய திரையில் படம் பார்க்கும்போது அதன் பிரம்மாண்டத்தை நாம் உணர்ந்தோம். தியேட்டரில் படம் பார்த்தவர்களால் அதற்கு இணையான அனுபவத்தை வேறு எதிலும் பெறமுடியாது.

image

எங்களைப் போன்ற இயக்குநர்களுக்கு தியேட்டர்தான் தாய்வீடு. நம்முடைய படம் தியேட்டரில் ரிலீசாகும் தருணம் மகிழ்ச்சியானது. என் இதயத்துக்கு நெருக்கமான இடத்தில் உதயம் தியேட்டர் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த படங்களை அங்குதான் பார்த்திருக்கிறேன். என் முதல் படமான ஜெயம்கொண்டான் படத்தையும் அங்குதான் பார்த்தேன். முதல் நாளும் ஹவுஸ்புல். 95வது நாளும் ஹவுஸ்புல், அந்த நாளிலும் படத்தைப் பார்த்தேன்” என்று நெகிழ்கிறார் கண்ணன்.

ஊருக்குள் உலவிய மம்மூத் கடல் யானை: ஆச்சர்ய வீடியோ

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.