பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் சகோதரர் மரணம்..!

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தம்பியான அனில் தேவ்கன் மரணமடைந்தார்.

பாலிவுட் திரையுலகில் பல வெற்றிப்படங்களை தந்த நடிகர் அஜய் தேவ்கன். இவரது சகோதரர் அனில் தேவ்கன் திரைப்பட இயக்குநராக இருந்தார். இவர் தனது அண்ணன் அஜய் தேவ்கனை வைத்து 2002ஆம் ஆண்டில் ராஜு ஜாஜா, 2005ஆம் ஆண்டில் பிளாக்மெயில் ஆகிய திரைப்படங்களை இயற்றிவர். அத்துடன் அஜய் தேவ்கனின் ஜான், பியார் டு ஹோனா ஹய் தா, சன் ஆஃப் சர்தார் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிவர்.

imageimage

இந்நிலையில் 45 வயது நிரம்பிய அனில் தேவ்கன் நேற்று இரவு உயிரிழந்ததாக அவரது அண்ணன் அஜய் தேவ்கன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் பதிவில், “எனது சகோதரன் அனில் தேவ்கனை நேற்றிரவு இழந்துவிட்டேன். அவரது அகால மரணம் எனது குடும்பத்தினரின் இதயத்தை உடையச் செய்துள்ளது. நானும், அஜய் தேவ்கன் ஃபிலிம் நிறுவனமும் அவர் இல்லாமல் வாடுகிறோம். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். கொரோனா தொற்று காலத்தின் காரணமாக நாங்கள் இறுதி அஞ்சலி கூட்டத்தை நடத்தவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

 

அனில் தேவ்கனின் மரணத்திற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் மே மாதம் அஜய் தேவ்கனின் தந்தையும், பிரபல பாலிவுட் இயக்குநருமான வீரு தேவ்கன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM