அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் கூடுதல் அதிகாரங்கள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில், அமைச்சர்கள் அன்பழகன், சி.வி.சண்முகம், காமராஜ் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

DMK knocks Raj Bhavan to take action against EPS, OPS- The New Indian  Express

இதைத்தொடர்ந்து தற்போது வரை இரண்டு தரப்பிலுமே ஆலோசனை நடைபெற்று வருகிறது. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என முடிவு செய்யப்பட்டாலும் வழிகாட்டுதல் குழுவில் யார் யார் இடம் பெறுவது என்பதில் இழுபறி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஒபிஎஸ் கூடுதல் அதிகாரங்கள் வேண்டும் என கூறியதாகவும் அதற்கு ஈபிஎஸ் தரப்பில் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.