சென்னை நுங்கம்பாக்கம் ராமா தெருவைச் சேர்ந்தவர் முனைவர் பிரகதீஸ் (49). இவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் எனது வீட்டில் சில பூனைகளுக்கு உணவளித்து வளர்த்து வருகிறேன். எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ரவி. இவர் அவ்வப்போது பூனைகளை அடிக்க வருவார். இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அப்போது அவர், பூனையை அடித்தத்தை ஒப்புக்கொண்டு, `இனிமேல் இவ்வாறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’ என எழுதிக் கொடுத்து சென்றுவிட்டார்.

சிசிடிவி கேமரா பதிவு

கடந்த 25-ம் தேதி நான் மதுரை சென்றுவிட்ட நிலையில் 27-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் எனது வீட்டுக்கு வெளியில் ரவி என்பவரின் மகன் சக்தி என்பவர் எங்கள் அனுமதி இல்லாமலும் பூனைகளை துரத்தி துரத்தி வற்புறுத்தி பாலை வைத்திருக்கிறார். 28-ம் தேதி காலை வீட்டுக்கு வெளியில் ஒரு பூனை இறந்து கிடந்தது. நாய் மற்றும் வண்டி ஏறியதற்கான காயங்கள் இல்லை. அதனால் யாரரோ விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என சந்தேகம் வந்தது. அதனால், சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தபோது சக்தி என்பவர் பூனைகளை அழைத்து, பால் வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இது சம்பந்தமாக சக்தியிடம் கேட்டதற்கு, `நான் பால் வைக்கவில்லை’ என்று கூறினார். பிறகு சிசிடிவியைக் காண்பித்தபோது மழுப்பினார். விஷம் வைத்து இறந்த பூனையை வீட்டு வாசலிலேயே புதைத்திருக்கிறேன். பூனையை பரிசோதனை செய்தால் எப்படி இறந்தது என்று தெரியவரும். பூனைக்கு சக்தி, பால் வைக்கும் சிசிடிவி பதிவையும் இணைத்துள்ளேன். இன்னொரு கறுப்பு நிற பூனையைக் காணவில்லை. எனவே பூனையைக் கொன்றவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜபிசி 429 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். சக்தியை கைது செய்த போலீஸார் ஜாமீனில் அவரை விடுவித்தனர்.

எப்ஐஆர்

Also Read: `டோரா புஜ்ஜி போனது… தங்கு பூனை வந்தது!’ – ஆன்லைன் வகுப்பால் வைரலான கேரள டீச்சர்

இதுகுறித்து முனைவர் பிரகதீஸிடம் பேசினோம். “நான் என்னுடைய வீட்டில் 4 பூனைகளை வளர்த்து வருகிறேன். தற்போது இறந்த ஆண் பூனைக்கு மச்சூஸ் என்று பெயரிட்டு செல்லமாக . கறுப்பு நிற பூனைக்கு வெல்வெட் என்று பெயர் வைத்துள்ளேன். இதில் மச்சூஸ், இறந்து விட்டது. பிரேத பரிசோதனைக்காக மச்சூஸை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்தப்பிறகுதான், அது எப்படி இறந்தது தெரியவரும். மச்சூஸ், வெல்வெட்டை காணாமல் மற்ற பூனைகளும் என்னுடைய குடும்பத்தினரும் சோகத்தில் இருந்துவருகிறோம். மச்சூஸிக்கு பாலில் விஷம் வைத்த சக்தி என்பவர், ஐடி நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். ப்ளு கிராஸ் அமைப்பினருக்கும் தகவல் தெரிவித்துள்ளேன். குழந்தைகள் போல வளர்த்த பூனைகளுக்கு இப்படியொரு நிலைமை வந்தது வேதனையாக உள்ளது. காவல்துறையினரும் ப்ளு கிராஸ் அமைப்பினரும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.