அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7-ஆம் தேதி ஒபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து அறிவிப்பார்கள் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது சில அமைச்சர்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்ற முடிவை இன்றே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது. அதில் சிலர் பன்னீர்செல்வம் தான் முதல்வர் வேட்பாளர் என பேசியதாக தெரிகிறது. இதனால் சர்ச்சை எழுந்ததாக கூறப்பட்டது.

AIADMK factions finally merge, Paneerselvam is Deputy CM | Tripuraindia

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் கேபி முனுசாமி கூறுகையில், “அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7 ஆம் தேதி ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிவிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.