நீச்சல் கற்றுக் கொடுத்த தந்தை… நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மகன்…

ராசிபுரம் அருகே வெண்ணந்தூரில் 6-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், நீச்சல் கற்றுக்கொள்ளும்போது தந்தையின் கண்முன்னே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

image
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் மதியம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார். கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள உள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியம்பட்டி அருகே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தோட்டத்திலுள்ள கிணற்றில் தனது மகன்களான தீபன் (11) சஞ்சய் (9) ஆகியோரை அழைத்துச் சென்று நீச்சல் பயிற்சி அளித்துள்ளார். 

image

அய்யனார், வழக்கமாக நீச்சல் கற்றுக்கொடுக்கும்போது குடுவை அல்லது இடுப்பில் கயிற்றை கட்டி தான் கற்றுக் கொடுப்பார். இதுபோல் பலமுறை கற்றுக் கொடுத்ததால் இன்று எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் இரண்டு மகன்களுக்கும் நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று இளைய மகன் தீபன் நீரில் மூழ்கியுள்ளார். 

image

அவரை காப்பாற்ற முயன்றபோது தனது இன்னொரு மகனும் நீரில்மூழ்கிக் கொண்டிருந்ததை பார்த்த அய்யனார் என்ன செய்வதென்று தெரியாமல் இளையமகன் சஞ்சய்யை காப்பாற்றி விட்டு மற்றொரு மகனை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் மூத்த மகன் தீபன் 60 அடி ஆழ கிணற்றில் மூழ்கிவிட்டான். 

image

இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் வெண்ணந்தூர் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்துவந்த திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினர் சுமார் 2மணிநேரம போராடி சிறுவனை மீட்டு பிரேத பரிசோதனைகாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM