நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களின் பங்களிப்பு குறித்த தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை. கோவிட்-19 நெருக்கடி காரணமாக செயல்பட சிரமப்படும் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் பற்றிய தகவல்களும் இல்லை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் பதிலளித்துள்ளார்.

image

தொழில்முனைவோர் வாய்ப்புகள், புதிய முயற்சிகள், புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் நாட்டில் முதலீட்டை அதிகரிப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக ‘ஸ்டார்ட் அப்’ செயல்பாடு இருக்கிறது. ஆனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களின் பங்களிப்பு குறித்த தகவல்கள் இன்னும் அரசாங்கத்தால் பதிவு செய்யப்படவில்லை என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அமெரிக்கா மற்றும் சீனாவைப் பின்பற்றி 8900-9300 தொழில்நுட்ப ‘ஸ்டார்ட்அப்’ களுடன், மூன்றாவது பெரிய ‘ஸ்டார்ட்அப்’ அமைப்பாக இந்தியா உள்ளது என்று நாஸ்காம் தொடக்க அறிக்கை 2019 இல் தெரிவித்துள்ளது. Paytm, Byju’s, OYO, Freshworks, Druva, Udaan போன்ற நிறுவனங்கள் தற்போது ஸ்டார்ட் அப் அமைப்பால்தான்  வழிநடத்தப்படுகிறது. மேலும் டிபிஐஐடி இதுவரை 37,385 நிறுவனங்களை ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்டார்ப் அப்களாக அங்கீகரித்துள்ளது.

image

கோவிட்-19 தாக்கத்தின் காரணமாக செயல்பாடுகளை நிறுத்திய ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக சிரமத்தில் உள்ள ஸ்டார்ட்அப்கள் பற்றிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இதுபற்றிய தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதேபோல் பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.எம்.இ க்கள் பற்றிய அரசாங்க தரவுகளும் கிடைக்கவில்லை, ஏனெனில் இந்த பொதுமுடக்கம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை தற்காலிகமாக பாதித்துள்ளது” என்று எம்எஸ்எம்இ அமைச்சக அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்தார்.

புதிய ஸ்டார்ட்அப்களால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பியூஸ் கோயல் “டிபிஐஐடி-யால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களின் வேலைவாய்ப்புகள் 2017 இல் 49,648 லிருந்து 2018 இல் 95,338 ஆகவும், 2019 ல் 1,54,558 ஆகவும் அதிகரித்துள்ளன. செப்டம்பர் 6, 2020 நிலவரப்படி, மொத்தமாக உள்ள 34,267 ஸ்டார்ட் அப்களால் 4,22,986 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில்( 80,714 வேலை வாய்ப்புகள்), கர்நாடகா (71,533 வேலை வாய்ப்புகள்), டெல்லி (49,497 வேலை வாய்ப்புகள்), உத்தரபிரதேசம் (33,803 வேலை வாய்ப்புகள்), ஹரியானா (29,770 வேலை வாய்ப்புகள்) ஆகிய மாநிலங்கள் வேலைவாய்ப்புகளில் முதலிடத்தில் உள்ளன.

Courtesy: https://www.financialexpress.com/industry/sme/dpiit-says-theres-no-data-on-startups-contribution-to-gdp-number-of-shutdowns-due-to-covid/2089944/lite/?utm_campaign=fullarticle&utm_medium=referral&utm_source=inshorts

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.