ஜனவரி 2021-க்கு முன்னரே சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்ற டிடிவி.தினகரன், பாஜகவின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.

image

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகான முதல் பொதுத்தேர்தல் என்பதால் வரும் 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க.விடம் இருந்து கடுமையான சவாலை எதிர்கொள்கிறது அதிமுக. இந்த சூழலில் சசிகலா தரப்பு தனியாக செயல்படுவதை பாஜக விரும்பவில்ல என்றே சொல்லப்படுகிறது.

இதனால் அதிமுக- சசிகலா இணைப்பு தொடர்பாக டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தைகள் பலனளித்தால் சசிகலாவை “விரைவில் விடுவிப்பதாக” டிடிவி தினகரனிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சசிகலா கட்சியின்  பொதுச் செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு ஒரு முக்கிய பதவி வழங்கப்பட வேண்டும் என்றும்  தினகரன் கோரியதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சர்-துணை முதல்வராக பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருடன் அரசாங்கம் தொடர ஏற்பாடு செய்யப்படலாம், அதே நேரத்தில் கட்சியின் அதிகாரம் சசிகலாவுக்கு செல்ல வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

image

அதிமுகவின் மூத்த அமைச்சர் ஒருவர் “மேற்கண்ட இரு பிரிவுகளின் இணைப்பு கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்றும், பாஜகவின் மத்திய தலைமை ஒரு வருடத்திற்கும் மேலாக இணைப்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறினார். சிறையில் இருந்து வெளியேறுவதில் எந்தவிதமான தடைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த சசிகலா முகாம் இந்த வாய்ப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம். எடப்பாடியும் சசிகலாவின் உதவியுடன் ஆட்சியை தக்கவைக்க விரும்பலாம். அனைவருக்கும் இதில் ஆர்வம் இருப்பதால், இந்த இணைப்பு செயல்பட வாய்ப்புள்ளது, ”என்று கூறினார். “திமுகவை எதிர்க்க அதிமுக ஒன்றிணைத்து போராட வேண்டும். சிறை தண்டனை அனுபவித்ததால் சசிகலா தீண்டத்தகாதவர் அல்ல ” என்று பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்

அமமுக பொருளாளரும் சசிகலா விசுவாசியுமான வெற்றிவேல்”கட்சித் தலைமை மீண்டும் பாதுகாப்பான கைகளுக்குத் திரும்பினால்” இந்த இணைப்பு சாத்தியமாகும். ” தற்போதைய அதிமுக முற்றிலும் உடைந்துவிட்டது, சசிகலா மற்றும் தினகரன் போன்ற தலைவர்களால் மட்டுமே கட்சியை புதுப்பிக்க முடியும். இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் பேச்சுவார்த்தைகளில் எந்த கேள்வியும் இல்லை” என்று கூறினார், தினகரனின் டெல்லி பயணம் குறித்த எந்த தகவல்களையும் அவர் மறுக்கவில்லை.

“எங்கள் நிரந்தர எதிரி” பாஜக அல்ல திமுகதான் என்று கூறிய வெற்றிவேல், தற்போதைய அதிமுக தலைமை தேர்தலில் தோல்வியடையும். ஏனெனில் அவர்களில் யாரும் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் அளவுக்கு பெரிய தலைவர் அல்ல” என்றார்

Courtesy: https://indianexpress.com/article/india/bjp-as-mediator-aiadmk-and-sasikala-hold-talks-for-merger-6606807/

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.