முதல் போட்டியில் விளாசிய ராயுடு இல்லாதது ஏன்? : தோனி கூறிய காரணம் இதுதான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷார்ஜா மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இந்த சீஸனின் நான்காவது லீக் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

image

மும்பை அணியுடனான முதல் போட்டியில் சென்னையின் வெற்றிக்காக ரன்களை விளாசிய ராயுடு இந்த போட்டியில் விளையாடவில்லை. அது ஏன் என டாஸின் போது வர்ணனையாளர் தோனியிடம் கேட்க அதற்கு அவர் சொன்ன காரணம் இது தான்…

image

“முதலில் பந்து வீச விரும்புகிறோம். மற்ற இரண்டு ஆடுகளங்களோடு இந்த பிட்ச்சை ஒப்பிட்டு பார்த்தால் விக்கெட் முற்றிலும் வேறுவிதமாக இருக்கும் என தோன்றுகிறது. பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருக்கும் என நினைக்கிறேன். அது எப்படி என்பது விளையாடும் போது தான் தெரியும். 

எங்கள் பிளேயிங் லெவனில் இன்று ஒரு மாற்றம் இருக்கிறது. ராயுடு நூறு சதவிகிதம் ஃபிட்டாக இல்லாததால் அவருக்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுகிறார்” என தெரிவித்தார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM