இந்தியாவில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனால் தனது இந்திய கார்தயாரிப்பு விரிவாக்க பணிகளை நிறுத்துவதாக டொயோட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

image

அதிக வரிகள் காரணமாக டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவில் மேலும் விரிவடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பெரும் பொருளாதார சீர்கேட்டை ஈடுகட்ட உலகளாவிய நிறுவனங்களை கவர்ந்திழுக்க முயலும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

“கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான வரிகளை அரசாங்கம் மிக அதிகமாக வைத்திருக்கிறது, இதனால் நிறுவனங்களை விரிவாக்குவது கடினம் என்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன் தெரிவித்தார். எந்த சீர்திருத்தங்களும் இல்லாத நிலையில், “நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டோம், ஆனால் நாங்கள் தொழிலை விரிவாக்கவும் முடியாது.” என்றும் கூறினார்

உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பான டொயோட்டா 1997 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்படத் தொடங்கியது. அதன் உள்ளூர் அலகு 89% ஜப்பானிய நிறுவனத்திற்கு சொந்தமானது, இந்த நிறுவனம் சிறிய அளவிலான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது, ஆகஸ்டில் வெறும் 2.6% மற்றும் ஒரு வருடத்திற்கு முன்பு கிட்டத்தட்ட 5% சந்தைப்பங்கை டொயோட்டோ கொண்டுள்ளது.

“ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் இந்திய சந்தையிலிருந்து விலகியது, இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருந்த ஃபோர்டு மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் அதன் பெரும்பாலான சொத்துக்களை மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டு நிறுவனமாக மாற்ற ஒப்புக்கொண்டது. இத்தகைய தண்டனைக்குரிய அதிக வரிகள் வெளிநாட்டு முதலீட்டை ஊக்கமிழக்க செய்கிறது”என்று விஸ்வநாதன் கூறினார்.

image

 “தற்போது 5%ஆக இருக்கும் மின்சார வாகனங்களுக்கான வரிகளும், அதன் விற்பனை அதிகரித்தவுடன் அதிகரிக்கும். வரிகளைக் குறைப்பதற்கான அமைச்சகங்களிடையே விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், வரி குறைப்பு குறித்து உடனடி உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை என்று இந்தியாவின் கனரக தொழில்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தார். என்று விஸ்வநாதன் கூறினார்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் வாகனங்கள் விற்பனை கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்பாக சரிவைச் சந்தித்தது, குறைந்தது அரை மில்லியன் வேலைவாய்ப்புகள் இழந்தன. மந்தநிலைக்கு முன்னர் காணப்பட்ட நிலைகளுக்கு விற்பனை திரும்புவதற்கு நான்கு ஆண்டுகள் ஆகலாம் என்று ஒரு கருத்துக்கணிப்பு நிறுவனம் கணித்துள்ளது.

“சந்தை இந்தியா என்பது, எப்போதும் தொழிற்சாலை இந்தியாவுக்கு முன்னதாகவே இருக்க வேண்டும் இது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளாத ஒன்று. ஒரு தயாரிப்பு சிறப்பாகச் செயல்படுவதற்கான அறிகுறி தென்படுகையில், அரசு அதிக வரி விகிதத்துடன் தாக்குகிறார்கள்” என்று அவர் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.