“இயற்கை முறையில் வாழைச் சாகுபடி செய்ய விரும்புகிறோம். இதற்கு நிலத்தைத் தயார் செய்வது எப்படி?”

@பாலாஜி, தூத்துக்குடி

“எந்த வகை நிலமாக இருந்தாலும், வடிகால் வசதி இருக்க வேண்டும். வழக்கமாக, ஏழேகால் அடிக்கு ஏழேகால் அடி இடைவெளியில், முக்கால் அடி ஆழத்துக்குக் குழி எடுத்துக் கிழங்குகளை நடவு செய்ய வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 25 கிலோ பல தானிய விதைகளை விதைக்க வேண்டும்.

இரண்டு வாழைக் கன்றுக்கு இடையில் முக்கால் அடி அகலத்தில், ஒன்றரை அடி ஆழத்தில் கிடங்கு வெட்ட வேண்டும். இதன் மூலம் நிலத்தில் தண்ணீர் தேங்காது. பல தானியங்கள் நிலத்தில் வளருவதால், களைகள் குறைவாக இருக்கும்.

இந்த முறையில் நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 1,000 வாழைக்கன்றுகள் வரை நடவு செய்யலாம். பூவன் வாழை ரகமாக இருந்தால், ஆறு அடிக்கு ஆறரை அடி இடைவெளி கொடுத்தால் போதுமானது. இந்த முறையில் 1,100 வாழைக்கன்றுகளை நடவு செய்யலாம்.

வாழை

பல தானியங்கள் முளைத்து வளர்ந்து பூ வைத்ததும், செடிகளை வேருடன் பிடுங்கிப் போடாமல் வேர்ப் பகுதியை நிலத்தில் விட்டு, செடிகளை மட்டும் அறுத்து வாழைக்கன்றுகளைச் சுற்றி மூடாக்காக இடவேண்டும். பலதானிய விதைப்பு எப்படி என்று பார்ப்போம்.

அதிக சத்துகள் தேவைப்படும் வாழைக்குப் பல தானிய விதைப்பு அவசியம்.

இயற்கை விவசாயத்திற்கு முதல் அடி எடுத்து வைக்கும் விவசாயிகள் முதலில் பல தானிய விதைப்பு முறையைப் பின்பற்ற வேண்டும். பல தானியச் செடிகள் காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து நிலத்தில் சேமித்து வைக்கும். இதுவரை ரசாயன உரங்களின் பயன்பாட்டால் வளமிழந்து போன நிலத்தை கூட 6 மாதங்களில் வளம் மிக்க நிலமாக மாற்றலாம்.

பின்வருபவை ஒரு ஏக்கருக்குத் தேவையான விதை அளவு ஆகும்.

தானிய வகைச் சோளம் – 1 கிலோ,

கம்பு – அரைக்கிலோ,

தினை – கால் கிலோ,

சாமை – கால் கிலோ,

பயறு வகை உளுந்து – 1 கிலோ,

பாசிப்பயறு – 1 கிலோ,

தட்டப்பயறு – 1 கிலோ,

கொண்டைக்கடலை -1 கிலோ,

எண்ணெய் வித்துக்கள் எள்ளு – 500 கிராம்,

நிலக்கடலை – 2 கிலோ,

சூரியகாந்தி விதை – 2 கிலோ,

ஆமணக்கு – 2 கிலோ,

பசுந்தாள் பயிர்கள் தக்கைப்பூண்டு – 2 கிலோ,

சணப்பு – 2 கிலோ,

நரிப்பயறு – அரைக் கிலோ,

கொள்ளு 1 கிலோ,

கடுகு – அரைக்கிலோ,

நறுமணப் பயிர்கள் வெந்தயம் – கால் கிலோ,

சீரகம் – கால் கிலோ,

கொத்தமல்லி – 1 கிலோ.

மேற்கூறிய விதைகளை எல்லாம் கலந்து ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வரை விதைக்கலாம். ஒவ்வொரு முறை வாழை அறுவடை முடிந்த பின்பும் இப்படிப் பலதானிய விதைப்பு செய்தால், நிலம் வளமுடன் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். இப்படி இயற்கை முறையில் சாகுபடி செய்யும் நிலத்தில் விளையும் வாழைப் பழத்தின் சுவையும் அருமையாக இருக்கும்.”

> “மீன் பண்ணை அமைக்க விரும்புகிறோம். இதற்கு மானியம் உண்டா, யாரைத் தொடர்புகொள்வது?”

> “பஞ்சகவ்யா பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். எங்கள் பகுதி விவசாயிகளுக்காக அதன் தயாரிப்பு முறைகளைச் சொல்லுங்கள்?”

– இந்தக் கேள்விகளுக்கு விரிவான வழிகாட்டுதல் வழங்கும் பசுமை விகடனின் நீங்கள் கேட்டவை பகுதியை முழுமையாக வாசிக்க கிளிக் செய்க – https://bit.ly/32thwEm

மீன் வளர்ப்புக்கு 60 சதவிகிதம் மானியம் பெறுவது எப்படி? https://bit.ly/32thwEm

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர… ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Pasumai Youtube Channel

இதுபோன்ற விவசாயம் தொடர்பான செய்திகள் மற்றும் பயனுள்ள வீடியோக்களைக் காண பசுமை விகடன் யூ-டியூப் சேனலுக்கு வாங்க. பசுமை விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய: bit.ly/pasumaiYoutube

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.