2020ஆம் ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில், அதுதொடர்பான அப்டேட்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் திருவிழாவை வரவேற்கத் தயாராக உள்ளனர். அத்துடன் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை அனைத்து அணியினரும் தொடங்கிவிட்டனர். இந்த முறை கோப்பை வெல்ல வேண்டும் என்பதில் அனைத்து அணிகளுமே தீவிரமாக உள்ளன. அத்துடன் தங்கள் அணியை கட்டமைப்பதிலும் அனைத்து அணியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி உள்ளிட்ட 6 வீரர்கள் பயிற்சிகளை தொடங்குவதற்காக சென்னைக்கு வந்துவிட்டனர்.அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இந்த முறை சிறப்பான அணியை கட்டமைத்து கோப்பை தட்டிவிட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கின்றனர். இதற்காக ஐபிஎல் ஏலத்தில் தங்களுக்கேற்ற வீரர்களையும் அவர்கள் வாங்கினர். முன்னதாக ஷாகிப் உல் ஹாசன் (ஒரு வருட தடை), தீபக் ஹூடா, மார்டின் குப்தில், ரிக்கி பூய் மற்றும் யூசுஃப் பதான் ஆகியோரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விடுவித்தது. பின்னர் ஏலத்தில் விராட் சிங், பிரியம் கார்க், மிட்ஜெல் மார்ஸ், சந்தீப் பவனாகா, ஃபைபன் ஆலென், அப்துல் சமாத் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோரை எடுத்தனர்.

image

இதில் மிட்சல் மார்ஷ் தவிர மற்ற அனைவருமே இளம் வீரர்கள் தான். ஏனென்றால் ஐதராபாத் அணி ஏற்கெனவே சீனியர் வீரர்களை கொண்டிருப்பதால் இவ்வாறு வீரர்களை வாங்கினர். இந்த வீரர்களையும் சேர்த்து ஒரு தரமான அணியை ஐதராபாத் உருவாக்கலாம். ஏற்கெனவே உள்ள வீரர்களில் கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், மணிஷ் பாண்டே, ஜான்னி பேரிஸ்டோவ், புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, விஜய் சங்கர், முகமது நபி, ரஷீத் கான், சந்தீப் ஷர்மா ஆகியோர் 2020 ஆண்டு அணியிலும் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை ஹைதராபாத் அணிக்கு வில்லியம்சனுக்கு பதிலாக டேவிட் வார்னர் கேப்டனாக இருப்பார் என தெரிகிறது.

image

இவர்களுடன் புதிதாக வாங்கப்பட்ட மிட்ஜெட் மார்ஸ்க்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இந்த அணியின் பலமாக பவுலிங் மற்றும் பேட்டிங் இருக்கும்.அதேசமயம் மிடில் ஆர்டர் மற்றும் ஆல்ரவுண்டரில் சிக்கல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 2016ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 2018ஆம் ஆண்டில் இறுதிப் போட்டி வரை வந்திருக்கிறது.

image

இதுதவிர ப்ளே ஆஃப் சுற்றுக்கு 3 முறை வந்திருக்கிறது. கடந்த ஆண்டு ப்ளே ஆஃப் சுற்றில் டெல்லியை எதிர்கொண்ட ஐதராபாத் அணி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பேரிஸ்டோவ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தாண்டு கேப்டன்ஸி மாறும் என்பதால் கோப்பையும் தங்கள் வசமாகும் என ஹைதராபாத் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.