காதல் திருமணம் செய்த பெண் 5 ஆண்டுகளுக்கு பிறகு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் சேர்ந்த கலையரசி (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் வீட்டிலிருந்த நெல் பத்தாயத்தின் மேல்மூடி கலையரசியின் தலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருடைய உடல் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து எடையூர் காவல்துறையினர் இது எதிர்பாராத விபத்தா அல்லது கொலையா ? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேமரா இல்லை;ஆனால் நினைவாற்றல் உண்டு -பைக் எண்ணை வைத்து வழிப்பறி செய்தவர்களை மடக்கிய போலீஸ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM