இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே ஏற்பட்ட எல்லை பிரச்னையை தொடர்ந்து சீன மொபைல் நிறுவனமான விவோவுடன் ஏற்படுத்தப்பட்டிருந்த ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சருக்கான ஒப்பத்தத்தை முறித்தது இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ).
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீராத்தில் ஆரம்பமாகவுள்ள நடப்பு சீசனுக்கான புதிய டைட்டில் ஸ்பான்சராக விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என நேற்று அறிவித்தது பி.சி.சி.ஐ.
‘புதிய டைட்டில் ஸ்பான்சருக்கான உரிமம் ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 31,2020 வரை மட்டுமே செல்லுபடியாகும்’ என தெரிவித்துள்ளார் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா.
ஸ்பான்சர்ஷிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளையும் அறிவித்துள்ளார் ஜெய் ஷா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM