நாட்டின் கொரோனா தொற்று பாதிப்பில் 80%, 10 மாநிலங்களில் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய மோடி, “கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலமும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பில் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இறப்பு விகிதம் குறைந்து குணமடைவோர் விகிதம் அதிகரிக்கிறது.
கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் கொரோனா தொற்று பாதிப்பில் 80 சதவீதம் 10 மாநிலங்களில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பீகார், குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM