விபத்தில் மரணமடைந்த தனது அப்பாவின் ஐ.ஏ.எஸ் கனவை ஸ்வீட்டி செஹ்ராவத்(28) நிறைவேற்றி வைத்திருக்கிறார்
டெல்லி காவல்துறையில் தலைமை கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தவர் டேல் ராம் செஹ்ராவத். இவர் 2013ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்ற மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வீட்டி தனது வடிவமைப்பு பொறியாளர் வேலையை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு ஆயத்தமானார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த பாடங்கள் வெவ்வேறாக இருந்ததால் இந்த தேர்வு தனக்கு எளிதாக இருக்கவில்லை. 2018ஆம் ஆண்டு முதல் முயற்சிக்குப் பிறகு, தன்னுடைய வேலையை விட்டுவிட்டு மனிதநேயம், புவியியல் மற்றும் உலக வரலாறு போன்ற பாடங்களை தானே படித்து இந்தத் தேர்வில் வெற்றியடைந்ததாக ஸ்வீட்டி கூறுகிறார்.
தேர்வு முடிவுகள் வெளியான அன்று பிற்பகலில்தான் அவர் இந்திய தரவரிசையில் 187வது இடத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்தது. அவரது தாயார் கமலேஷ் மற்றும் சகோதர் ஹரிஷ் உற்சாகமடைந்து உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைத்துக் கூறியுள்ளனர்.
தந்தை ஆரம்பத்தில் ரொட்டி விற்று, 1989இல் போலீஸ் துறையில் சேர்ந்ததால் கஷ்டம் எங்களுக்குத் தெரியும் என்றும், ஒரு ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரியாக பிள்ளைகள் வரவேண்டும் என்பதுதான் அப்பாவின் கனவு என்றும் ஸ்வீட்டியின் சகோதரர் ஹரிஷ் கூறியுள்ளார்.
இதுபற்றி அறிந்த டெல்லி காவல்துறை ஆணையாளர் எஸ்.என். ஸ்ரீவஸ்டவா உட்பட பல போலீஸ் அதிகாரிகள் இவருக்கு போனில் அழைத்து வாழ்த்துகளைக் கூறியுள்ளனர்.