நடிகர்கள் சூர்யா, விஜய் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல என நடிகை மீராமிதுனுக்கு இயக்குநர் பாரதிராஜா அறிவுரை கூறியுள்ளார்.

நடிகை மீராமிதுன் அண்மை காலமாக முன்னணி நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். அதிலும் சூர்யா, விஜய், த்ரிஷா போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இழிவாக பேசி வருவதாக கூறப்படுகிறது.

ஆபாச புகைப்படத்தை முதல்வருக்கும் ...

இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. சூர்யா கல்வி போன்ற நல்விஷயங்களை செய்து வருகிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மற்றவரை தூற்றி பழித்து அதில் கோட்டை கட்டாதீர்கள். அது மண்கோட்டையாகத்தான் இருக்கும். சகல கலைஞர்களின் குடும்பங்களை அவதூறாக பேசியும் எந்த சங்கமும் குரல் கொடுக்காதது வியப்பையே அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

image

மேலும், “நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர். அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீராமிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார். திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினனாக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.

பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.