வறியவர்களுக்கு தேடி சென்று உதவும் மனம் படைத்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
தற்போது அவர் அரசியல் குறித்து தனது கருத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
“அரசியல் ஆதாயம் பெறுவதற்காக நான் பதவிக்கு வந்தால் உங்களுக்கு இதை செய்வேன், அதை செய்வேன் என மக்களிடம் உறுதியளித்து நேரத்தை வீணடிப்பதை காட்டிலும் அமைதியாக இருந்தபடி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவரால் சமூகத்திற்கு சேவை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். அரசியலில் நுழையாமலே மக்களுக்கு வேண்டிய சேவைகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு நான் வெளியிட்ட வீடியோவே எனது பன்னிரண்டு வருட முயற்சி மற்றும் நம்பிக்கையின் சான்று. அந்த வீடியோவில் பல குழந்தைகளின் கனவு நனவாகியிருப்பதை நீங்கள் பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார் அவர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM