மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25 இலட்சம் நிதியுதவி வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ இதுவரை 29-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துள்ள கேரள நிலச்சரிவில் சிக்கிய 80 தொழிலாளர்களும் கயத்தாறைச் சார்ந்தவர்கள். இவர்களது குடும்பத்தினர் மூணாறு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக முதல்வர் செய்யவேண்டும். கேரள முதல்வர் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி நிதியுதவியை ரூ.25 லட்சமாக உயர்த்துக” என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை 29 உயிர்களைப் பறித்துள்ள #KeralaLandslide-ல் சிக்கிய 80 தொழிலாளர்களும் கயத்தாறைச் சார்ந்தவர்கள்.
இவர்களது குடும்பத்தினர் மூணாறு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் @CMOTamilNadu செய்யவேண்டும்.@CMOKerala மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி நிதியுதவியை ரூ.25 லட்சமாக உயர்த்துக!
— M.K.Stalin (@mkstalin) August 9, 2020