தமிழ் சினிமா ரசிகர்களை தங்களது அபார நடிப்பு திறமையினால் கவர்ந்தவர்கள் நடிகர் சிம்பு மற்றும் நடிகர் கம் இயக்குனரான பார்த்திபன்.
இருவரும் இதுவரை எந்தவொரு படத்திலும் இணைந்து பணியாற்றிடாத சூழலில் அது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பார்த்திபன்.
“சுயம்பு ’சிம்பு’ பற்றி என் உளப்பூர்வப் பாராட்டு அவருக்கு எட்ட, அன்றிரவே எட்டு மணிக்கு அவரின் உதவியாளர் ஒரு பூங்கொத்தும், சாக்லெட்டுமாக வந்தார். மிஸ்டர் சிம்பு தொலைபேசியில் நன்றியதில் மிஸ்டர் பண்பு ஆனார் என் எண்ணப்புத்தகத்தில்!
‘எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் ஏன் வொர்க் பண்ணலேன்னு’ என்றாதங்கப்பட்டார். அதாகப்பட்டது…. விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்” என தெரிவித்துள்ள பார்த்திபன், சிம்பு தனக்கு அனுப்பிய பூங்கொத்தையம், வாழ்த்து செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் விரைவில் சிம்புவும், பார்த்திபனும் சினிமாவில் கூட்டணி அமைப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் சிம்புவை ‘சுயம்பு’ என தெரிவித்திருந்தார் பார்த்திபன். அதற்கு நன்றி சொல்லும் விதமாக சிம்பு பூங்கொத்தை பார்த்திபனுக்கு அனுப்பியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM