இன்ஸ்டாகிராம் தனது புதியரீல்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ’இன்ஸ்டாகிராமில் சிறிய, பொழுதுபோக்கு வீடியோக்களை உருவாக்க புதிய வழி’ என ட்வீட் செய்திருந்தது. அதற்கு டிக்டாக் கிண்டலடித்து ட்வீட் செய்திருக்கிறது.
கடந்த மாதம் இன்ஸ்டாகிராம் தனது ரீல்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் டிக்டாக் தடைசெய்யப்பட்டதால் இந்த அம்சம் பலரின் வரவேற்பைப் பெற்றது. குறுகிய வீடியோக்களை பதிவேற்ற டிக்டாக்கிற்கு பதிலாக இந்த தளத்தை பலரும் ஏற்றுக்கொண்டனர். இதில் ஆடியோவுடன் 15 விநாடி வீடியோக்களை உருவாக்க முடியும். இதை இன்ஸ்டாகிராமின் பிரத்யேக பிரிவில் காணலாம். டிக்டாக்கில் சற்று நீளமான வீடியோக்களை பதிவேற்ற முடியும். ஆனால் இன்ஸ்டாகிராம் வெறும் 15 நொடிகளை மட்டுமே அனுமதிக்கிறது.
well… this looks familiar ?? https://t.co/V8GyRSXkPu
— TikTok (@tiktok_us) August 6, 2020
டிக்டாக், இன்ஸ்டாகிராம் இரண்டையும் ஒப்பிடமுடியாது என்றாலும், பயனர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காக அமையும். கடந்த புதன்கிழமை இன்ஸ்டாகிராம், ‘சிறிய பொழுதுபோக்கு வீடியோக்களை உருவாக்க புதிய வழி’ என ட்வீட் செய்தது. இதைப் பற்றி பலரும் பதில் ட்வீட் செய்துவந்த நிலையில், டிக்டாக்கும், ‘வெல் இட்ஸ் ஃபெமிலியர்’ என பதில் டிவீட் செய்து, கண் சிமிட்டும் இமோஜியை சேர்த்துள்ளது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM