ஹரியானாவைச் சேரந்த சாஜூராம் என்பவரின் மகள் சுப்ரியா. எல்லா பாடங்களிலும் 90 மதிப்பெண்கள் பெற்ற பார்வை மாற்றுத்திறனாளியான அந்த மாணவிக்கு கணிதத்தில் 2 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. உடனே சுப்ரியாவின் தந்தை மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஹிசார் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துவரும் சுப்ரியாவுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வுகள் அண்மையில் வெளிவந்தன. கணிதப் பாடத்தில் இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தார்

தற்போது மறுகூட்டலின் மூலம் சுப்ரியாவுக்கு அதே பாடத்தில் 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. “எனக்கு இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது கவலையாக இருந்தது. மறுகூட்டலுக்கு அப்பா விண்ணப்பித்தார். எனக்கு 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. எனக்கு நடந்ததுபோன்று வேறு எந்த மாணவிக்கும் நடக்கக்கூடாது” என்று கூறுகிறார் பாதி அளவுக்கு பார்வை பாதிப்படைந்த மாணவி சுப்ரியா.

இந்த மாணவியின் தந்தை கணித ஆசிரியர். மறுகூட்டலுக்காக அவர் 5 ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ளார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.