சென்னை மாநகரத்தில் தற்போது ‘லைவ்’ ஆக உள்ள ரௌடிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
7,650.
மாநகரத்தில் யார் ‘நம்பர் ஒன்’ ரௌடி என்பதற்கான ரேஸ் உச்சத்தில் இருக்கிறது. ரௌடி கோஷ்டியில், காக்கா தோப்பு பாலாஜி, சி.டி.மணி இருவரும்தான் இதுநாள்வரையில் பெரிய கைகள். சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் சொகுசு கார் ஒன்றில் அண்ணா சாலையில் பயணிக்கும்போது அவர்களைப் பின்தொடர்ந்த கும்பல் ஒன்று, சொகுசு காரின் மீது வெடிகுண்டுகளை வீசியது. ரோட்டின் எதிர்ப்பக்கத்தில் பாய்ந்து தப்பிய காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
சென்னையைப் பதறவைத்த இந்தச் சம்பவத்தை அரங்கேற்ற ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர்… ‘சம்பவ’ என்கிற அடைமொழியோடு பவனிவரும் ஒரு ரௌடி.
ரௌடிகள் வட்டாரத்தில் சர்வசாதாரணமாக உச்சரிக்கப்படும் ‘சம்பவ’க்காரரை இதுநாள்வரை சென்னை போலீஸ் நேரில் பார்த்தது கிடையாது. கடந்த ஒரு வருடகாலமாக ‘சம்பவ’க்காரரை போலீஸ் தேடிக்கொண்டே இருக்கிறது.
”சார்… இப்பத்தானே உங்க பக்கத்துல நின்னாரு. கவனிக்கலையா?” என்று போலீஸாரிடம் ரௌடிகள் கிண்டலடிப்பார்கள். சென்னை போலீஸ் ரெக்கார்டுகளில் அவரது படம் இல்லை. சட்டம் தெரிந்தவரான இவர், போலீஸுக்கு நன்றாக தண்ணீர் காட்டவும் தெரிந்தவர். சென்னை மாநகரத்தில் இப்போதைக்கு ‘நம்பர் ஒன்’ இடத்தை நோக்கி முந்திக்கொண்டிருப்பவர் ‘சம்பவ’க்காரர்தான்!
திருவள்ளூர் மாவட்ட எல்லையில் இருக்கிறது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. இதில் குடியிருக்கும் இளைஞர் ஒருவருக்கு அங்குள்ள செக்யூரிட்டியுடன் சின்னப் பிரச்னை. தன்னைப் பற்றி பயம் வர வேண்டும் என்பதற்காக, அந்த இளைஞர் பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து, தரையில் அடித்துள்ளார். அது வெடித்துச் சிதறியதில் குடியிருப்புவாசிகள் வெலவெலத்துப் போய்விட்டனர்.

போலீஸார் பிடித்து விசாரித்ததில், ஒரு பெரிய கஞ்சா வியாபாரியின் பெயரைச் சொன்ன இளைஞர், “ரௌடின்னா பயம் வரணும் சார். சும்மா உதார் விட்டுட்டு இருந்தா மதிக்க மாட்டாங்க. அதான் குண்டு வீசுனேன்” என்று கூலாகச் சொல்லியுள்ளார். கஞ்சா பார்ட்டியிடம் மாமூல் கரெக்டாக வந்துவிடுவதால், அந்த இளைஞர்மீது வெடிகுண்டு விஷயத்தைத் தவிர்த்து வேறு பிரிவுகளில் வழக்கு போட்டு அமுக்கிவிட்டது போலீஸ்.
‘இது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க போலீஸுடன் ரௌடிகள் போட்டுள்ள மறைமுக ஒப்பந்தம்தான் பிரதான காரணம்’ என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். இதுபோக, பிரபல ரௌடிகள் பலரும் தேசியக் கட்சி ஒன்றில் தங்களை இணைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டிவருவது அடுத்த காரணமாகச் சொல்லப்படுகிறது.
– தமிழகத்தில் க்ரைம் ரேட் எகிற ஆரம்பித்துவிட்டது. கொரோனா பீதியால் பதுங்கியிருந்த ரௌடிகள் மீண்டும் அரிவாள், கத்திகளுடன் பொது இடங்களில் சுற்ற ஆரம்பித்துள்ளனர். ரௌடிகள், கூலிப்படையினருடன் கூட்டணி போட்டுக்கொண்டு, சில உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் அடிக்கும் கொட்டம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நேர்மையான பல அதிகாரிகள், சின்சியாரிட்டி காரணமாகக் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு கொரோனா தொற்றை வாங்கிக்கொண்டதுதான் மிச்சம். இப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கை மட்டுமே இரண்டாயிரத்தைத் தாண்டுகிறது. தடுப்பதற்கு ஆளும் இல்லாமல், சில காக்கிகளின் ஆசீர்வாதத்துடன் ரௌடிகள் தைரியமாகக் களத்தில் இறங்கிவிட்டார்கள் என்றே தெரிகிறது. தமிழகம் முழுவதும் குற்றச் சம்பவங்கள் எந்த அளவில் நடக்கின்றன?
ஒரு லைவ் ரிப்போர்ட் இதோ ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியில்… முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க… https://bit.ly/3fzx8cI > எகிறுது க்ரைம் ரேட்! – எங்கே செல்கிறது தமிழகம்? https://bit.ly/3fzx8cI
சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV