ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடிகர் ராணா டகுபதி, மிஹீகா பஜாஜை மணமுடிக்கவுள்ளார். இதையொட்டி இருவர் வீடுகளிலும் விழாக்கள் ஆரம்பித்துள்ளன.

ஹல்தி விழாவில் பங்கேற்க ஜூபிலி ஜில்ஸில் உள்ள மிஹீகாவின் வீட்டில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளதோடு, பிரகாசமான மஞ்சள் நிற லெஹெங்கா மற்றும் சீஷெல் நகைகளுடன் அவர் ஓடி விளையாடும் அழகிய புகைப்படங்களை டைம்ஸ் ஆஃப் இந்தியா பகிர்ந்துள்ளது. அவருடைய நெருங்கிய உறவினர்கள் ஒன்றுகூடி கொண்டாடி வருகின்றனர்.

image
நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ள இந்த திருமண நிகழ்ச்சியை மிஹீகாவின் வீட்டிற்கு அருகேயுள்ள திருமண மண்டபத்திலேயே வைத்து அரங்கேற்றவுள்ளனர். இதனால் வீடு மற்றும் மண்டபங்களை ஆடம்பரமாக அலங்கரித்துள்ளனர்.

கொரோனா வைரஸால் தொற்றுநோய் பரவிவிடக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு வரும் சனிக்கிழமை நடக்கவுள்ள இந்த திருமணத்தில் நெருங்கிய 30 உறவினர்கள் மட்டுமே விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.