சென்னையில் வெகுநாள் கழித்து ஆயிரத்துக்கும் குறைவான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று 984 பேருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலில் ஒரே நாளில் 5,880 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 6,488 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,27,575 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 110 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தம் 4,690 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த பாதிப்பு 1,07109 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இன்று 1103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM