மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டடப் பணிகள் விரைவில் தொடங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மதுரையில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.247 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் 100 நாட்கள் வேலைத் திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறினார். மதுரையில் 3 தொழிற்பேட்டைகளில் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் பல்வேறு நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்பீட்டில் தொடங்கியுள்ளன என்றார். இதுதவிர மதுரையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
டிவி நடிகர் அறையில் மர்ம மரணம் : போலீஸ் விசாரணை..!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM