விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பியின் அக்கா பானுமதி கொரோனாவால் பாதிக்கப்படு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர், இன்று மரணம் அடைந்தது அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
65 வயதாகும் பானுமதி திருமாவளவன் எம்.பியின் மூத்த அக்கா. இரண்டாவது அக்கா பிறக்கும்போதே இறந்துவிட்டார். மூன்றாவதாக பிறந்தவர்தான் திருமாவளவன்.
அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களின் நேசத்திற்குறிய அக்கா திருமதி பானுமதி அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்த செய்தியை கேட்டு பெரும் துயரம் அடைகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்!! pic.twitter.com/BXlAyuGEtT
— pa.ranjith (@beemji) August 5, 2020
நடிகர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணன் திருமாவளவனின் நேசத்திற்குரிய அக்கா திருமதி பானுமதி இறந்த செய்தியைக் கேட்டு துயரமடைகிறேன். ஆழ்ந்த இரங்கல்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM