தமிழகத்தில் கொரோனாவால் ஒரேநாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை முதல்முறையாக 100-ஐ தாண்டியது. 8 வயது சிறுமி உட்பட 109 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் மேலும் 5,609 பேர் கொரோனாவால் பாதிப்பு. தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியது.
இருமொழிக் கொள்கை மட்டுமே தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி. மத்திய அரசின் மும்மொழிக் கல்வி முறை வேதனை அளிப்பதாக அறிக்கை.
மும்மொழிக் கொள்கையை எதிர்த்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி. ட்விட்டரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு.
வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை மற்றும் நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்பு.
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான தங்க வியாபாரி ரமீசிடம் 60 சிம்கார்டுகள் பறிமுதல். பயங்கரவாத தொடர்புகள் உள்ளனவா என என்ஐஏ தீவிர விசாரணை.
நெல்லை அருகே புதையல் இருப்பதாகக் கூறி குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி. போலி சாமியாரை கைது செய்தது காவல் துறை.
மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை உடனே செயல்படுத்துக. பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய மு.க.ஸ்டாலின் கோரிக்கை.
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நாளை நாடாளுமன்ற தேர்தல். வாக்காளர்களுக்கு தனி மனித இடைவெளி, கை கழுவுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிப்பு.
அமெரிக்காவில் அரசு வேலைகளில் வெளிநாட்டவர் சேர்வதற்கு தடை விதிப்பு. எச்1பி விசா தொடர்பான புதிய அரசாணையில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM