இ-பாஸ் வாங்கித் தருவதாக முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து வெளியேறுவதற்கும், சென்னைக்குள் நுழைவதற்கும் இ-பாஸ் வழங்குவதில் இருக்கும் கெடுபிடிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஆணையர் பிரகாஷ், இ-பாஸ் வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் இதுவரை சென்னையில் 1.20 லட்சத்துக்கும் மேல் இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இ-பாஸ் முறைகேட்டில் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
ஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM