தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்தின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள நடிகை ரியா சக்ரபோர்த்தியை அனுமதிக்கவில்லை என்று ரியாவின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே கூறும்போது “ சிலர் கூறுவதுபோல ரியா எங்கும் தலைமறைவாகவில்லை. அவர் எப்போதும் மும்பையில்தான் உள்ளார். மேலும் ரியா எப்போதும் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பளித்து வருகிறார். ஏற்கனவே ஜூன் 18 ஆம் தேதி சுஷாந்த் தற்கொலை தொடர்பாக தனது பதிலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு ஜூலை 17 ஆம் தேதியும், நடிகை ரியா சண்டாகுரூஷ் காவல்நிலையத்தில் ஆஜராகி தனது பதிலை தெரிவித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
சுஷாந்தின் தந்தை நடிகை ரியாவுக்கு எதிராக பீகாரிலுள்ள பாட்னா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த வழக்கை பீகாரிலிருந்து மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ரியா வழக்கு தொடர்ந்துள்ளார்.