கொரோனா முன்னெச்சரிக்கை: ”ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்துகொள்ள மாட்டேன்” உமா பாரதி!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் பட்டியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பா.ஜ.க மூத்த தலைவர் உமா பாரதி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

image

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் “உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அயோத்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் குறித்தும், பிரதமர் மோடி கலந்துகொள்வது குறித்தும் நான் கவலைக்கொள்கிறேன். நான் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து உத்தரபிரதேசம் ரயிலில் பயணம் செய்யவிருப்பதால், எனக்கு இடையில் கொரோனா பாதிப்புக்கூட ஏற்படலாம். இந்நிலையில் நன் கலந்துகொண்டால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். அதனைத் தவிர்க்கவே இந்த முடிவு” என்று அறிவித்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பூமி பூஜை முடிவடைந்து அனைவரும் சென்றபிறகு அங்குச் செல்வேன் என்று கூறியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM