“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா?” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், ஜுன் 14-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டது திரையுலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது, தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத சூழலில், மும்பை காவல்துறையினர் அவரது காதலி ரியா சக்ரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.

இந்நிலையில், சுஷாந்தின் நண்பர் சித்தார்த் பிதானி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, “சுஷாந்தின் முன்னாள் மேனேஜர்  திஷா மாடியிலிருந்து குதித்து ஜூன் -8 ந்தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரது, காதலருடன் இருக்கும்போதுதான் அந்த தற்கொலை சம்பவம் நடந்தது. இதற்கு, சுஷாந்த் காரணம் என்பதுபோல் ஊடகங்களில் செய்தி வெளியானது.

 

image

மேலும், சுஷாந்தின் மேனேஜராக திஷா கொஞ்சநாட்கள்தான் இருந்தார். இதுகுறித்து, சுஷாந்த் என்னிட பேசும்போது, ‘என் வாழ்க்கையில ஒரே ஒருநாள்தான் அந்த மேனேஜரைப் பார்த்திருக்கேன்’ என்று சொல்லி அழுதார். அதோடு, அவரது காதலி ரியா இவரை பிரிந்து சென்றுவிட்டார். ரியா பிரிந்து சென்ற மறுநாள் அவர் எந்த அளவுக்கு ஃபீல் பண்ணிக்கிட்டிருந்தார்ன்னு நானும் சுஷாந்தின் சகோதரியும் நேரடியாக பார்த்தோம். அழுதுக்கிட்டே இருந்தார். ரொம்ப விரக்தியாகி மயக்கமாகிட்டார். அதற்கு, அடுத்தநாள்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார். அதனால், அவரது தற்கொலைக்கு காரணம் ரியாதான்” என்று அதிர்ச்சித்தகவலை வெளியிட்டது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

image

மேலும், சுஷாந்த் சிங் காதலி ரியா நடிகை ஆலியாபாட்டின் தந்தையும் தயாரிப்பாளருமான 71 வயதாகும்  மகேஷ் பாட்டுடன் காதலில் இருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. அதனால்தான், சுஷாந்தை பிரிந்து சென்றுள்ளார் என்று கூறபப்டுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM