நடுரோட்டில் தீப்பிடித்த பைக்; பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

காஞ்சிபுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

காஞ்சிபுரம் குஜராத்தி சத்திரத்தை சேர்ந்த நபர் ஒருவர் அதே சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது. இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

image

இருப்பினும் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தீயை அணைக்க முயற்சித்தும் தீ மளமளவென எரிந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM