“ஆளுநர், உள்துறை அமைச்சர் விரைவில் நலம் பெற வேண்டும்”-மு.க.ஸ்டாலின் ட்வீட்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். 

imageஇது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”கொரோனா பாதிப்பிலிருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைந்து, முழு நலத்துடன் வீடு திரும்ப வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு பதிவில், ”மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் விரைவில் முழுநலம் பெற்று மீண்டும் தனது நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த என்னுடைய மனமார்ந்த விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM