ஐ.பி.எல் இறுதி போட்டி நவம்பர் 10ம் தேதிக்கு மாற்றம்?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந் தேதி முதல் நவம்பர் 8-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. 

இந்நிலையில்  ஐ.பி.எல் இறுதி போட்டி நவம்பர் பத்தாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் ஐபிஎல் நிர்வாக குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

image

இன்றைய ஆலோசனையில் இறுதி போட்டிக்கான தேதி நவம்பர் 10-ஆம் தேதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் போட்டிகள் வழக்கமான 8 மணிக்கு தொடங்காமல், 7.30 மணி அளவில் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM