கடந்த சிலமாதங்களாக உலக நாடுகளையே அச்சுறுத்திவரும் கொரோனா எப்போது முடிவுக்கு வருமோ என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அச்சுறுத்தும கொரோனாவுக்கு பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

image

இந்தியாவில் இருந்து வேலைக்காக வெளிநாட்டிற்குச் சென்றவர்கள் கொரோனாவால் வேலை இழந்து உண்ண உணவின்றி பலவகையிலும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் அந்தந்த மாநிலங்களின் உதவியால் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். பலர் இன்றும் ஊர் திரும்ப முடியாமல் வேலைக்குச் சென்ற நாட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இதில் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள வளைகுடா நாடுகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். கொரோனா நோய் பரவலால் வளைகுடா நாடுகளில் பணியாற்றியவர்களை அந்த மாநில அரசு மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தது. இதில் பலர் சொந்த ஊர் செல்ல பணம் இல்லாமல் வளைகுடா நாடுகளிலேயே இருக்கின்றனர்.

image
இந்நிலையில் துபாயில் இருக்கும் மலையாளி ஒருவர், வளைகுடா நாடுகளில் சிக்கித்தவிக்கும் கேரள  மாநிலத்தை சேர்ந்த 61 பேர் இந்தியா செல்ல விமான டிக்கெட்களை வழங்கியுள்ளார். இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும் இப்படியொரு உதவிசெய்த 53 வயதான நபர்.

imageஎனது 19 வயது மகன் ஒருகார் விபத்தில் இறந்துவிட்டான். அவனுடைய நினைவாகவே நான் இதைச் செய்துள்ளேன். வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு வந்தவர்கள். கொடிய கொரோனாவால் வேலை இழந்து மிகவும் வேதனையுடன் சிக்கித் தவித்தனர். அவர்களை மீட்டு தங்களது சொந்த ஊருக்குச் செல்ல 14 லட்சம் ரூபாய் செலவில் 61 டிக்கெட்களை எடுத்துக் கொடுத்துள்ளேன் என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.