கமலின் ‘பாபநாசம்’ திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் அப்படத்தில் வரும் ஒரு சீன், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 2-ம் தேதியன்று ரசிகர்களால் நினைவுகூறப்படுகிறது.

படத்தில் ஆகஸ்ட் 2 அன்று டிஜிபியான ஆஷா சரத்தின் மகனை கமல் குடும்பத்தினர் தாக்கியதில் இறந்து விடுவார். அக்கொலையை மறைக்க கொலை நடந்த ஆகஸ்ட் 2 அன்று தாங்கள் யாருமே ஊரில் இல்லை என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக, கமல் குடும்பத்தார் ஆஷா சரத்திடம் நாடகமாடுவார்கள்.

இந்த காட்சிகள் உருவாக்கப்பட்ட விதமும் கமலிடம் வெளிப்பட்ட நடிப்பும் ரசிகர்களின் மனதில் ஆகஸ்ட் 2 என்ற நாளை அழுத்தமாக விதைத்தது. இதையொட்டி ஒவ்வொரு ஆகஸ்ட் 2-ம் தேதி அன்றும் பாபநாசம் காட்சிகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

imageimageimageimageimage

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.