கேரளாவில் நாணயத்தை விழுங்கிய 3 வயது ஆண் குழந்தை மருத்துவமனைகளின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கேரளாவின் ஆலுவாவில் உள்ள கடுங்கல்லூரைச் சேர்ந்த தம்பதியினரான ராஜா மற்றும் நந்தினி ஆகியோரின் மூன்று வயது ஆண் குழந்தை பிருத்விராஜ். இந்தக் குழந்தை நேற்று காலை நாணயம் ஒன்றை விழுங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே ஆலுவா வட்டார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி அளித்துள்ளனர். பின்னர் குழந்தை நல மருத்துவர் இல்லை எனக் கூறி, எர்ணாகுளம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து குழந்தையின் பெற்றோர் எர்ணாகுளம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கு குழந்தைக்கு வாழைப்பழங்கள் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாழைப்பழங்கள் சாப்பிட்டால் மலத்தில் நாணயம் வந்துவிடும் எனக் கூறி அனுப்பியுள்ளனர். இதனால் குழந்தையை அழைத்துக்கொண்டு 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆலப்புழா மருத்துவமனைக்கு பெற்றோர் சென்றுள்ளனர்.

image

அங்கும் வாழைப்பழங்கள் கொடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் நாணயம் வெளிவரவில்லை என்றால் 3 நாட்களுக்குப் பின்னர் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று பெற்றோரிடம் கூறி அனுப்பியுள்ளனர். மருத்துவமனைகளின் அறிவுரையை நம்பி குழந்தையுடன் பெற்றோர் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் இரவில் குழந்தையின் நிலைமை மோசமடைய, இன்று காலையில் குழந்தை இறந்துவிட்டது.

இதனால் மனம் நொந்த பெற்றோர், தங்கள் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனைகள் அலைக்கழிப்பு செய்ததே குழந்தையின் இறப்புக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர். கொரோனா காலத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் இதுதான் நிலை என்றும், சிகிச்சைக்காக வரும் குழந்தைகள், பெரியோர் என யாருக்கும் உரிய மருத்துவம் அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை என்றும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

image

பணம் அதிகம் வைத்திருப்பவர்கள் மட்டுமே உயர்தர தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடிகிறது எனவும் கூறுகின்றனர். நாணயத்தை விழுங்கிய குழந்தைக்கு முறையான மருத்துவம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு இறந்த சம்பவம் கேரளாவின் ஆலுவாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்கள் மீது எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது : ரமேஷ் பொக்ரியால்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.