மாநிலங்களவை உறுப்பினரும் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவருமான அமர் சிங் (64) இன்று காலமானார்.

சிறுநீரக பிரச்னை காரணமாக சிங்கப்பூரில் மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார் அமர் சிங். கடந்த 2013 இல் அமர் சிங்கிற்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து துபாயில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு மீண்டும் அரசியலுக்கு வந்தார். 2010 இல் சமாஜ்வாதி கட்சியிலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கி நடத்தி வந்தார் அமர் சிங்.

image

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசிலிருந்து விலகிய பின்னர், 2008 இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசாங்கத்தை ஆதரிக்க கட்சி நகர்ந்த நேரத்தில் சமாஜ்வாதி கட்சியில் அமர் சிங் ஒரு முக்கிய தலைவராக இருந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அமர் சிங்குக்கு உடல் நலக் குறைவு இருந்து வந்தது.

சிறுநீரக பிரச்னை காரணமாக சிங்கப்பூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அமர் சிங் இன்று உயிரிழந்தார். அவருக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.