புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்தியாவில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டுமக்களிடையே உரையாற்றுகிறார். அப்போது புதிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் உரையாற்றுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM